Thursday, February 6, 2014

நமது ராஜ வையித்திய அருளாசிரமத்தின் நோக்கம்:



அந்நிய மற்றும் மேலை நாட்டு மருத்துவ முறையை கையாள்வர்கள் நமது பாரம்பரிய மருத்துவ முறையை மாற்று மருத்துவம் என்று சொல்லும் அவல நிலைக்கு நமது பாரம்பரிய மருத்துவ முறை  தள்ளப்பட்டுள்ளது, இந்த அவலத்தை தகர்த்தெறிவதே முதல் நோக்கமாகும்.

சித்த மருத்துவம், ஆயுள்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், வீட்டு வையிதியம், காட்டு வையிதியம், நாட்டு வயித்தியம், மலை வயித்தியம், பாட்டி வயித்தியம், எலும்பு கட்டு வயித்தியம், வர்ம வயித்தியம் பலவாறு என்று பலவாறு பிரிந்து கிடக்கும் நமது தேசத்தின் பாரமரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து அரசை "Indian System of Medicine" என்று ஒரு ஒருங்கிணைந்த புதிய பரிமாணத்தை உருவாக்கி உலக அளவில் இம்முறையை கொண்டு செல்லல்.

நோய், நோய் வரும் காரணங்கள் மற்றும் அதை தீர்த்துக்கொள்ளும் வழிமுறை மேலும் வரும்முன் காக்கும் வழிமுறைகள் குறித்து சாதாரண மக்களும் கூட தெரிந்துக்கொள்ளும் வகையில் ஒரு கட்டமைப்பை நாட்டில்  உருவாக்குதல்

சாதாரண மக்களுக்கும் நமது அறிய மருத்துவ முறைகள் சென்றடைய ஒரு தளம் ஏற்படுத்துவது

நாளும், கோளும், நாடியும் பார்த்து நோயாளிக்கு உரிய மருந்து தருவது

தருமம் தலை காக்கும் என்பதற்கிணங்க வரும் நோயாளிகளை அரச்செயல் புரிய ஆர்வமூட்டி தான, தான்ய தானங்கள் செய்ய ஊக்குவிப்பது

ஆசிரமத்திற்கு வரும் அன்பர்களுக்கு அன்ன தானம் செய்வது

சித்தர் அறிவியல் மற்றும் வாழ்வியல் குறித்து ஆராய்வது மற்றும் அதன் படி வாழ்வது

பாரம்பரிய உணவுமுறைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து  நடைமுறைபடுத்துவது

இயற்க்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துவது மற்றும் மண் மானம் மீட்பது

உணவே மருந்து என்னும் கொள்கையை துலங்க வைப்பது

பத்தியம் காக்க வேண்டிய நோயாளிகளுக்கு அதற்குரிய பத்தியம் சார்ந்த மற்றும் இயற்க்கை முறையில் உற்பத்தியான உணவு பொருட்களை விநியோகித்தல்.

மேற்கண்ட பணிகளுக்காக இயற்க்கை வேளாண்மை செய்வோரை ஊக்குவித்து தக்க விலையில் அவர்களிடம் கொள்முதல் செய்வது

கல்லூரி படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு பயன் படும் வகையில் அவர்களின் விடுமுறை நாட்களில் மருத்துவம் சார்ந்த மற்றும் தேவையான மூலிகைப்பொருட்களை சேகாரம் செய்ய வைத்து அதன் மூலம் அவர்களுக்கு பகுதி நேர வருமானம்  ஏற்படுத்துவதோடு மருத்துவம் மற்றும் வாழ்வியல் விழிப்புணர்வு தருதல்.

மேலும் ஏனைய பல நோக்கங்கள் உள்ளன.. வருங்காலங்களில் அவற்றையும் புகுத்தி வெளியிடவுள்ளோம்.




No comments:

Post a Comment