Tuesday, June 4, 2013

புற்று நோயை குணமாக்கலாம் - Cancer is Curable - பாகம் 1

 புற்று நோயை குணமாக்கலாம் - Cancer is Curable - பாகம் 1


புற்று நோய்(Cancer) தமிழ் மருத்துவத்தின் பார்வையில்..

புற்றுநோய் என்பது கன்ம நோய்களான குன்மம், மகோதரம், மூலம், பௌத்திரம், பறங்கி, கிரந்தி, கட்டி, கடி, மறு, ஆணி  மற்றும் பிளவை போன்ற நோய்களின் இறுதி கட்டமே. இங்கு குறிப்பிட்டுள்ள நோய்களின் முற்றிய நிலையின் இயல்புகளும் புற்றுநோயின் இயல்புகளும் ஒத்தே இருக்கும். 

புற்றுநோய் வரும் காரணம் இவை மட்டும் தானா என்றால் இல்லை, சில பழக்கவழக்கங்களும் தான்.

சித்தர்களின் பார்வையில் புற்று(ரணம்) உருவாகும் விதம் என்னவென்று பார்ப்போம்:

சொல்லிய அறுவை யாலுஞ் சுகமில்லா முழுகை யாலும் 
வல்லயப் பொறியி னாலும் மருந்தீட்டுக் குணத்தி னாலுங் 
கொல்லுயிர் செய்கை யாலுங் கொடும்பகை மோகத் தாலும்
வல்லபால் பகல ருந்தில்  வலுரணம் பிறக்கு மென்றார்.                     3

துஞ்சவே அசுவ நோவுக் கருந்ததி காசைச் செய்து 
மிஞ்சிய கோயில் பூசை விட்டவர் தமக்கு மாகும் 
அஞ்சவே வேளை தன்னை மதத்துடன் பரித்த பேர்க்குக்
கஞ்சனைப் பிளந்த மாயன் கடுகியே கால னாவார்.                                4

காரிகை உமையாள் பாகன் கலந்தினிநரர்க்கு ரோகம்
சாரிளை நரக மீந்து சரீரங்கள் ளீயச் செய்யும் 
வாரிக்கு ளுதித்த கண்டன் வகைபடப் பாவத் தோர்க்கு 
ஏரிளைப் பாவந் தன்னை இதம்பட ரணமாய்ச் செய்தார்.                      5

செய்திட்ட பாவந் தானுஞ் செப்பபெரு ரோக மாச்சு 
மையிட்ட கண்ணாள் பங்கன் வாகடப் படியே யாக 
பெய்திட்டப் பேசா நூலின் பெருமையை அறிந்து சொல்வோம்
கைதிட்டங் கலந்த ரோகம் கரையினில் அறிந்து சொல்வோம்.       6

பிறந்திடும் ரோகந் தன்னில் பேதமேப் பிரித்துப் பேச 
அறிந்து மேகங்கள் தன்னால் அருரண மிருப தாகும் 
பொருந்திய வாதந் தன்னால் பொருரண மொன்ப தாகும்
மருந்தியல் பித்தம் பத்து வளர்சிலேற்பனம் பன்னிரெண்டே             7

எண்டிசைக் கிரந்தி நோய் யியல்பத்து நூற தாகும்
மண்டிய வகைய றிந்து வயித்தியம் பிரித்துச் சொல்வோம் 
தண்டமிழ் புகல்வோர் முன்னந் தாமுரை செய்த நூலை 
வண்டுறை குழலினாளே மதுரம் போலு ரைத்திட் டோமே                  8 

ஆதாரம்: 

அகத்தியர் ரண நூல்
பாடல் எண்கள்: 3, 4, 5,6, 7 மற்றும் 8


This post is under construction, for more clarity wait for further update ..

குறிப்பு:  

- உலகின் மற்ற பகுதிகளில் மனிதன்  நாகரீகம், கலாச்சாரம் மற்றும் கல்வி போன்ற விடயங்களை அறியும் முன்பே அவற்றை மட்டுமல்லாது மருத்துவத்திலும் தமிழன் சிறப்புற்று இருந்ததின் சாட்சியாக இந்நூலை எடுத்துக்காட்டாக  கட்டலாம். 

 - இன்று வரையும் கூட நமது நவீன இறக்குமதி மருத்துவத்தில் cancer(புற்று) ஒரு புரியாத புதிர்தான்.



Wednesday, March 20, 2013

முப்பு இரகசியம்(Secret of Muppu / philosopher's stone):


முப்பு இரகசியம்:





முப்பு என்றால் என்ன? மற்றும் மெய்பொருள் விளக்கம்!

முப்பு என்பது முக்குற்றமான வாதம், பித்தம் மற்றும் சிலேத்துமம் என்பனவற்றை ஒழுங்கு படுத்தி இம்மை எனும் நிகழ்கால வாழ்க்கையை செம்மைப்படுத்தி, ஆரிருள் எனும் காமம், கோபம், குரோதம், லோபம், மத  மற்றும்  மாச்சர்யம்  என்பனவற்றை அகற்றி, மும்மலங்களான ஆனவம் , கன்மம் மற்றும் மாயை என்பனவற்றை போக்கி, மறுமையான ஆதி அந்த அந்தர்யாமியான பரம்பொருளை அடையவைக்கும் இறைவடிவமாகும். முப்பு என்பது இறைவனே சந்தேகம் வேண்டாம். இந்த இரகசியத்தை நமது தென்னாட்டில் வாழ்ந்த சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றும் மகான்கள் அறிந்து அவரவர் வழிகளில் நமக்கு விட்டுவைத்து சென்றிருக்கிறார்கள். 

உதரணமாக,


மணிவாசக பெருமான் கீழ்கண்டவாறு முப்பின் ரகசியத்தை சொல்கிறார்.




சிவன் அவன் என் சிந்தையுள் 
நின்ற அதனால் அவன் அருளாலே 
அவன் தாள் வணங்கி 

அடுத்து,

திருவள்ளுவ பெருமான் தனது முதல் குறளிலேய அகார ("அ"), உகார ( "உ" ) இரகசியத்தை நமக்கு கூறுகிறார். இந்த மெய்பொருள் விளக்கம் சித்தர்கள்(திருவள்ளுவரும் சித்தர்களுள் மிகவும் முக்கியமானவர்) அருள் இல்லாமல் யாருக்கும் புரியாது, அதனால் தன நமது தமிழ் புலவர்கள் கூட மெய்பொருள் விளக்கம் புரியாமல் ஏதேதோ அர்த்தங்கள் புரிந்துகொண்டு விளக்கம் கூறிவருகிறார்கள். 




அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு

சித்தர்கள் அருளால் யாம் உணர்ந்த விளக்கத்தை கீழே குறிபிடுகிறேன்:


அகார ("அ"), உகார ( "உ" ) மற்றும் மகாரம்("ம ") என்பதே அகர முதலான எழுத்தாகும் இம்மூன்றே முப்புவகும் இம்முப்பே அதி மெய்ப்பொருளான இறைவனாகும்.


நிச்சயமாக புள்ளியோ, பிறையோ, கோடோ "அ" முதல் ஆரம்பிக்கும் உயிரேளுதுக்களோ அல்லது வேறு ஏதாவதோ அர்த்தம் கொண்டால் எம்மலோ அல்லது வள்ளுவ பெருந்தகையலோ எதுவும் செய்யமுடியாது.
முதல் குறளே இந்த போடு போடும் போது மீதம் உள்ள குறள் இரகசியங்களை என்ன சொல்லுவது.


அடுத்து,


ஒளவையார் பிராட்டியும் கூட முப்பு பற்றி பாடாமல் இல்லை அவர் பாடிய மூதுரையின் கடவுள் வாழ்த்தே முப்பின் இரகசியமாகும் அருள்பெற்றோருக்கு புரியும்.




வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு.

இவ்வாறு சொல்லப்போனால் நமது முன்னோர்களின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.



இன்னும் பதினென்மர் வழியில் சென்றால் பார்த்தால் ஆயிரம் ஆயிரம் விளக்கங்கள் தென்படும் அதை பற்றி இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்.
இப்படிக்கு,


அருள் தேவர் மான சித்தார் 




விதியோ மதியோ உள்ளவர்கள் எமது வலைப்பூவை கண்டவுடன் மெய்ப்பொருளை உணர்வர்.




Friday, March 15, 2013

Welcome



ஹர ஹர நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!!


அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி!



"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"



விதியோ மதியோ உள்ளவர்கள் எமது வலைப்பூவை கண்டவுடன் மெய்ப்பொருளை உணர்வர்.